Homeசெய்திகள்சினிமாகளத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்.... மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு!

களத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்…. மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு!

-

- Advertisement -

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்து வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அவர் தகாத முறையில் பேசிய இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை என்பதைத் தாண்டி ஒரு பெண்ணாக திரிஷாவை அவமதித்ததை கண்டித்து பல சமூக அமைப்புகளும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. மேலும் திரிஷாவுக்காக குஷ்பூ, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் போன்றோர் குரல் கொடுத்தனர். இதற்கு மன்சூர் அலிகான் “உலகத்துல நிறைய பிரச்சனை இருக்கு… போயி வேற பொழப்ப பாருங்க” என்று அலட்சியமாக பேசியுள்ளார்.களத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்.... மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு!

இந்த சர்ச்சையின் அடுத்த கட்டமாக தற்போது களத்தில் இறங்கி இருக்கிறது தேசிய மகளிர் ஆணையம். சட்டப்பிரிவு 509 பி மற்றும் இது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தேசிய மகளிர் ஆணையம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல சமூகப் பிரச்சினைகள் எழுந்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இதனை வன்மையாக கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ