அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். மேலும் அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளையும் பட குழுவினர் அஜர்பைஜானில் படமாக்கவே திட்டமிட்டிருந்தனராம். ஆனால் தற்போது அஜர்பைஜானில் காலநிலை மாற்றத்தால் பனிப்பொழிவு ஏற்படுவதால் மீதமுள்ள படப்பிடிப்புகளை அங்கு தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அஜித், மகிழ் திருமேனி ஆகிய பட குழுவினர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை வேறொரு இடத்தில் படமாக்கும் ஆலோசனையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட புதிய சிக்கல்….. அஜித், மகிழ் திருமேனியின் அடுத்த பிளான் என்ன?
-