Homeசெய்திகள்சினிமாஅடுத்த டார்கெட் 1500 கோடி.... 'புஷ்பா 2' படக்குழுவினரின் புதிய அறிவிப்பு!

அடுத்த டார்கெட் 1500 கோடி…. ‘புஷ்பா 2’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு!

-

புஷ்பா 2 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அடுத்த டார்கெட் 1500 கோடி.... 'புஷ்பா 2' படக்குழுவினரின் புதிய அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான படம் தான் புஷ்பா 2. சுகுமார் இந்த படத்தை இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஷாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். ஏற்கனவே 2021 இல் வெளியான புஷ்பா பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன்படி இந்த படம் வெறும் 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

அதேசமயம் அடுத்தது 1500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. அந்த வகையில் இந்த படம் இரண்டாவது வாரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 11 நாட்களில் ரூ. 1409 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் 2000 கோடி ரூபாயை நெருங்கி இமாலய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ