Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம்... பல புதிய படங்களை தயாரிக்க திட்டம்!

லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம்… பல புதிய படங்களை தயாரிக்க திட்டம்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்கள் ஒரு தனி பாணியில் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷை தான் சேரும் .அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம்... பல புதிய படங்களை தயாரிக்க திட்டம்! அத்தயாரிப்பு நிறுவனத்திற்கு G SQUAD (ஜி ஸ்குவாட்) என பெயரிட்டுள்ளார். நிறுவனத்தின் லோகோவில் தேளை வைத்து வடிவமைத்துள்ளனர். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வரும் போதைப் பொருள்களில் முத்திரையாக தேள் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதை குறிப்பிடும் வகையில் கூட இந்த லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கலாம். லோகேஷின் தயாரிப்பு நிறுவன அறிவிப்பில் அவர் கூறியதாவது, “ஐந்து படங்களை இயக்கிய நான் தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளேன். புதுமையான கதை கூறும் அனுபவத்துக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். தொடக்கமாக என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய படங்களை தயாரித்து வெளியிட உள்ளேன். என்னை ஊக்குவிக்கும் வகையில் நீங்கள் அளித்த ஆதரவை அவர்களின் படங்களுக்கும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். என்னுடைய முதல் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்றும் அதில் கூறியுள்ளார்”.லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம்... பல புதிய படங்களை தயாரிக்க திட்டம்!
மேலும் லோகேஷ் கனகராஜன் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் முழுவதுமாக படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இப்படத்தின் அப்டேட்டுகள் மிக விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது டிசம்பர் மாதத்தின் மத்தியில் அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

MUST READ