மலையாள சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு முன்பாக புலி முருகன், லூசிபர் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது. ஆனால் சமீப காலமாக நல்ல கன்டென்ட் உள்ள மலையாள சினிமாக்கள் அடுத்தடுத்து வெளியாகி அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி வரும் மலையாள சினிமாக்களை கேரள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் அதிவேகமாக 200 கோடி வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து வெளியான பிரம்ம யுகம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான ஆவேஷம், வர் ஷங்களுக்கு சேஷம் போன்ற திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
The reason why more quality films are coming from Malayalam ✌️👏pic.twitter.com/AxDhqBajqL
— AmuthaBharathi (@CinemaWithAB) April 24, 2024
இந்நிலையில் நடிகர் பகத் பாசில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “மலையாள சினிமாவில் தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை வருவாய் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே நூறு கோடி வசூலை நோக்கி ஓடாமல் தரமான நல்ல படங்களை நல்ல படங்களை வழங்குவது தான் மலையாள சினிமாவின் நோக்கம். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகள் மலையாள சினிமாவுக்கானது” என்று தெரிவித்துள்ளார்.