Homeசெய்திகள்சினிமாகார்த்தி - அரவிந்த்சாமி நடிக்கும் மெய்யழகன்... முதல் தோற்றம் ரிலீஸ்...

கார்த்தி – அரவிந்த்சாமி நடிக்கும் மெய்யழகன்… முதல் தோற்றம் ரிலீஸ்…

-

நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். ஆனால், ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. மேலும், வசூலிலும் தோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை தனது அடுத்தடுத்த படங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து, கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இந்நிலையில், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமியும், கார்த்தியும் சைக்கிளில் செல்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ