Homeசெய்திகள்சினிமாமுதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!

முதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!

-

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. படத்தில், வைகைப்புயல் வடிவேலுவின் குரலில் பாடப்பட்ட ‘ராசா கண்ணு’ என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மனதை உருக்கும் இப்பாடலானது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வருகின்ற மே 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்திரனாக கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது .மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ