Homeசெய்திகள்சினிமாஅடடா இது தெரியாம போச்சே..... 'கோட்' படத்தில் இருக்கும் செம ட்விஸ்ட்!

அடடா இது தெரியாம போச்சே….. ‘கோட்’ படத்தில் இருக்கும் செம ட்விஸ்ட்!

-

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்தால் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. அடடா இது தெரியாம போச்சே..... 'கோட்' படத்தில் இருக்கும் செம ட்விஸ்ட்!யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். பிரியமுடன், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் விஜயை வில்லனாக பார்த்தது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதிலும் ஒரே திரையில் தளபதி மற்றும் இளைய தளபதியை பார்த்தது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்தினை தளபதி திருவிழாவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் கோட் படத்திலிருந்து யாருக்கும் தெரியாத ட்விஸ்ட் ஒன்று வெளி வந்துள்ளது. அதாவது படத்தின் இறுதியில் அப்பா விஜயை மகன் விஜயை கொன்றுவிடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அடடா இது தெரியாம போச்சே..... 'கோட்' படத்தில் இருக்கும் செம ட்விஸ்ட்!அதன் பின்னர் க்ளோனிங் முறை மூலம் இரண்டு விஜய் காட்டப்பட்டு இரண்டாவது பாகத்திற்கான லீடு போன்று கதை முடிக்கப்பட்டிருக்கும். இதனை ரசிகர்கள் சிலர், இறந்தது காந்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜயின் ஒரிஜினல் மகன்தான் என்றும் அதன் பிறகு க்ளோனிங் முறையில் தான் மகனாக நடித்திருக்கும் ஜீவன் உருவாக்கப்பட்டு வருவதாக புரிந்து கொண்டனர். ஆனால் உண்மை கதை என்னவென்றால் இறந்ததே க்ளோனிங் விஜய் தான். மற்ற குளோனிங் விஜய்களை உருவாக்குவது தான் ஒரிஜினல் மகன் விஜய். இந்த தகவல் சில ரசிகர்களுக்கு புரியவில்லை என்றும் தற்போது தான் புரிந்து கொண்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ