Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா... தாய்லாந்து பறக்கும் படக்குழு...

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா… தாய்லாந்து பறக்கும் படக்குழு…

-

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம ஆர்.ஆர்.ஆர். ராஜமௌலி இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது. அதுமட்டுமன்றி ஆஸ்கர், கோல்டன் குளோப் என பெரும் பிரம்மாண்ட மற்றும் மதிப்பிற்குரிய அனைத்து விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தேவரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல டோலிவுட் இயக்குநர் கொரட்ட சிவா இத்திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். அத்துடன் பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப் அலிகான் இதில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கிறதாம். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ