நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிகப் பிரம்மாண்டமாகவும் புகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தமாகினார். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நடிகர், சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என படக் குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Lights! Camera!! Action!!!#Suriya44FirstShot#LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️ Begins Today@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off #Jayaram #Karunakaran… pic.twitter.com/JrYRwgywQa
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 2, 2024
அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 2) அந்தமானில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.