Homeசெய்திகள்சினிமாவிரைவில் முடிவடையும் 'சூர்யா 44' படப்பிடிப்பு...... அடுத்தது 'வாடிவாசல்' தான்!

விரைவில் முடிவடையும் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு…… அடுத்தது ‘வாடிவாசல்’ தான்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் முடிவடையும் 'சூர்யா 44' படப்பிடிப்பு...... அடுத்தது 'வாடிவாசல்' தான்!இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் படமானது ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. எனவே சூர்யா அடுத்ததாக தனது 44வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்தமானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளாராம்.விரைவில் முடிவடையும் 'சூர்யா 44' படப்பிடிப்பு...... அடுத்தது 'வாடிவாசல்' தான்! ஆகையால் இதைத் தொடர்ந்து 2024 அக்டோபர் மாதத்தில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான தகவலை பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

MUST READ