கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. அதேசமயம் கமல், பிரபாஸின் கல்கி திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைக்கிறார். நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுவதும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட பட குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே படமானது 2024 நவம்பர் மாதத்தில் திரையிடப்பட வாய்ப்புள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -