சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் தடம் பதித்து உயரமான நிலையை அடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவரைப் போல தெய்வமகள் சீரியலின் மூலம் கவனம் பெற்ற வாணி போஜன், தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் சைத்ரா ரெட்டி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க இருக்கிறார்.
சைத்ரா ரெட்டி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் அறியப்பட்டவர். அதைத் தொடர்ந்து சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி பல்வேறு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அதே சமயம் யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் பல ரீல்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர், அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் வெள்ளித் திரையில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் சைத்ரா ரெட்டியை வெள்ளி திரையில் காண எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.