கேன்ஸ் திரைப்பட விழாவில் கண்ணப்பா படக்குழு
- Advertisement -
பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கண்ணப்பா படக்குழுவினர் பங்கேற்றனர்.
தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. பேண்டசி டிராமா கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கண்ணப்பர் என்ற வேடத்தில் விஷ்ணு நடிக்கிறார். இந்து கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகிறது. இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் சிவனாக நடிக்கிறார். கௌரவ வேடத்தில் இருவரும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபாஸூம் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் படத்திலிருந்து திடீரென விலகியதால் தான், அந்த கதாபாத்திரம் அக்ஷய் குமாரிடம் சென்றது. இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் அக்ஷய் குமார் தொடர்பான காட்சிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், பிராசன்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஷ்ணு மஞ்சு, பிரபுதேவா, மோகன் பாபு ஆகியோர் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.