Homeசெய்திகள்சினிமாகோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது

கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது

-

- Advertisement -

கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது.

குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் நடித்திருக்கும் ‘கோஸ்டி‘ படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, மனோபாலா, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் ‘கோஸ்டி’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோஸ்டி படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகிறது.

MUST READ