Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்......ஏன் தெரியுமா?

இயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்……ஏன் தெரியுமா?

-

இயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்......ஏன் தெரியுமா?இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் சங்கர். ஹாலிவுட்டுக்கு இணையாக தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு வந்தவரும் இவர்தான். இவருடைய படங்கள் பெரும்பாலானவை சமூகத்தில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான வகையிலேயே இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டமான கமர்சியல் படமாக அமைந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தியன் 2 படமும் ஊழலுக்கு எதிரான படமாக உருவாகி வருகிறது. அதேசமயம் இயக்குனர் சங்கர் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படமும் அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது.இயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்......ஏன் தெரியுமா?இதில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், ஜெயராம், சமுத்திரகனி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்பு முழுமை அடையாமல் தாமதமாகி வருகிறது. இயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்......ஏன் தெரியுமா?இதனால் நீண்ட நாட்களாக கேம் சேஞ்சர் படம் நிலுவையில் இருப்பதாலும், படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை என்பதாலும் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாக படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனையும் பட குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ஆர்வத்தை அடக்க முடியாத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இயக்குனர் சங்கருக்கு எதிராக #Irresponsible Director Shankar என்ற ஹேஷ் டேக் – ஐ ட்ரெண்டாக்கி வருகின்றனர்.இயக்குனர் சங்கருக்கு எதிராக ட்ரண்டாகும் ஹேஷ் டேக்......ஏன் தெரியுமா?

மேலும் இது குறித்து, இயக்குனர் சங்கர் மட்டும் இதற்கு பொறுப்பாக முடியாது. நடிகர் ராம்சரணுக்கும் இடையில் குழந்தை பிறந்தது, அதை தொடர்ந்து வேறு சில காரணங்களாலும் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ