Homeசெய்திகள்சினிமாமனோபாலாவுக்காக மகன் பாடிய கடைசி பாடல்... கண்கலங்க வைக்கும் தருணம்!

மனோபாலாவுக்காக மகன் பாடிய கடைசி பாடல்… கண்கலங்க வைக்கும் தருணம்!

-

மனோபாலாவுக்காக அவரது மகன் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மனோபாலா கடந்த மே 3 அன்று உடல்நிலை சரியித்தால காரணத்தால் மறைந்தார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அதையடுத்து அவருக்கு கல்லீரலிலும் பிரச்சினை ஏற்பட்டு நிலைமை மோசமானது. கடந்த சில நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 3ம் தேதி திடீரென மரணமடைந்தார்.

மனோபாலா 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை 24 படங்களை இயக்கியுள்ளார். காமெடி நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் மனோபாலாவின் கடைசி தருணங்களில் அவரது மகன் ஹரிஷ் அவருக்கு பாடல் பாடி உற்சாகப்படுத்துகிறார். வீடியோவில் அவரின் மனைவி, மகன் மற்றும் உதவியாளர் உள்ளிட்டோர் மனோபாலாவை உற்சாகப்படுத்துகின்றனர். இந்த வீடியோ பலரை கண்கலங்க வைத்துள்ளது.

MUST READ