நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இயற்கையில் நடிகர் அஜித், குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்புகளும் ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கின்றன. அதேசமயம் இந்த படத்தை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாகவும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. அதன்படி தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தபு நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -