Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழு

ரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழு

-

- Advertisement -
விஜய் தேவரகொண்டா மற்றும் மிர்ணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சினிமா பின்புலமே இல்லாமல் யூடியூப் வீடியோக்கள் மற்றும் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, இன்று சினிமாவின் முகவரியாக மாறி இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில் பெல்லிசோப்லு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய். அடுத்ததாக அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம், இந்திய அளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்கில் அவர் நடித்து வந்தார்.,

இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இத்திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் பேமிலி ஸ்டார். ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ