Homeசெய்திகள்சினிமாதனுஷின் 'இட்லி கடை' ரிலீஸுக்கு வந்த புதிய சிக்கல்!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸுக்கு வந்த புதிய சிக்கல்!

-

- Advertisement -

தனுஷின் இட்லி கடை ரிலீஸாவதில் புதிய சிக்கல் வந்துள்ளது.தனுஷின் 'இட்லி கடை' ரிலீஸுக்கு வந்த புதிய சிக்கல்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தனுஷின் 'இட்லி கடை' ரிலீஸுக்கு வந்த புதிய சிக்கல்!இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. எனவே அதற்காக இந்தப் படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இட்லி கடை திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தில் நடிகை நித்யா மேனனின் போர்ஷன் இன்னும் முடிவடையவில்லை என்பதால் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ