கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி. அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது மரகத நாணயம் படத்தின் ஏஆர்கே சரவணன் இயக்கும் ‘வீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் ஆதிரா ராஜ், வினய் ராய், முனீஸ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஹிப்ஹாப் ஆதி,
“சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது 3-வது படம். மற்ற இரண்டு படங்களைப் போலவே இதுவும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
அடுத்து இயக்குநர் சரவணன். எனக்கு ‘இன்று நேற்று நாளை’ சமயத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்தப்படத்தில் தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் கூட இருக்கும்.
இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய் அண்ணன். அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி.
ஆதிரா கேரளாவிலிருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார்.
என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90’ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும் நாஸ்டலஜியா.
இப்போது, பள்ளிகள் திறப்பு தள்ளி போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக எங்களுடைய ‘வீரன்’ படத்தைக் கொண்டு வந்து காண்பிக்கலாம்.
அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து ‘வீரன்’ நினைவில் நிற்கும் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூடக் கிடையாது.” என்று பேசியுள்ளார்.