அஜித் நடிப்பில் தான் இயக்க இருந்த AK62 படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கியிருப்பதாகவும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. மேலும் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகியதாகவும் அதற்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இது குறித்து தற்போது மனம் திறந்து உள்ளார்.
“AK62 படம் எனக்கு ஏமாற்றம் தான். Ajith Sir பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போ Magizh Thirumeni Sir மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி. ஒரு Fan-அ இதை நான் Enjoy பண்ணுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி AK62 படத்தில் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.