ராஜா ராணி என்ற அறிமுக படத்திற்கு பிறகு தளபதியை வைத்து தெறி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. அதுவரை பார்த்திராத ஸ்டைலிஷான விஜயை தெறி படத்தில் காட்டி இருந்தார் அட்லீ. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என தகவல்கள் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதன்படி படத்தின் நாயகனாக வருண் தவான், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கீ படத்தை இயக்கிய காலிஸ் இயக்க உள்ளார். வருண் தவானின் 18 வது படமான இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார். மேலும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#Theri Hindi Remake!
Varun Dhawan, Keerthy Suresh, Wamiqa Gabbi.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 14, 2024
இயக்குனர் அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இயக்குனராக பாலிவுட்டில் அறிமுகமானார். அதேசமயம் அட்லீ தமிழில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.