நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் தனது 69ஆவது படத்தில் நடிக்க உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆகவே தளபதி 69 படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், த்ரி விக்ரம், எச் வினோத் போன்றோர் தளபதி 69 படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் தரப்பில் தளபதி 69 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் குறித்து இன்னும் பத்து நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் இயக்குனர் அட்லீ, விஜயை சந்தித்து பேசினாராம். அப்போது தளபதி 69 படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், ஷாருக்கான் இதில் படத்தில் கேமியா ரோலில் நடிக்க உள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அப்படி தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறார் என்றால் தெறி பட கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் இருந்து வருகின்றனர். எனவே விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானால்தான் இதற்கான விடை கிடைக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.