கசப்பான சம்பவங்களால் சினிமாவை விட்டு விலகினேன்… கண்கலங்கிய நடிகை பாவனா…
- Advertisement -
ஒரு சில கசப்பான சம்பவங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன் என்று நடிகை பாவனா தெரிவித்திருந்தார்.

தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அவர் அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழில் உச்ச நடிகையாகவும் அவர் விளங்கினார். தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வந்தார். இடையே, நடிகர் திலீப்குமாரால் பல பிரச்சனைகள் உருவெடுத்தன. இந்த பிரச்சனையால் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு மாறி மாறி அலைந்து திரிந்தார் நடிகை பாவனா. இதையடுத்து, தற்போது மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழில் ஒரு படம் நடித்து வரும் பாவனா, மலையாளத்தில் டொவினோ தாமஸூடன் சேர்ந்து நடிகர் திலகம் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வௌியானது.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பாவனா, வன்கொடுமை சம்பவத்தை அடுத்து திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்து மீண்டும் நடிக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு சில கசப்பான சம்பவங்களால் சினிமாவை விட்டு விலகினேன். தன்னை மோசமாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டதாக கண்கலக்கினார். இதிலிருந்து மீளவே சிறிது நாட்கள் சினிமாவை விட்டு விலகினேன் என்று தெரிவித்தார்.