Homeசெய்திகள்சினிமாபாய்.. பாய்-னு சொல்றாங்க... இதெல்லாம் நியாயமா?.... ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!

பாய்.. பாய்-னு சொல்றாங்க… இதெல்லாம் நியாயமா?…. ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!

-

- Advertisement -

ரஜினி, சூர்யா ரசிகர்கள் குறித்து சல்மான் கான் பேசியுள்ளார்.பாய்.. பாய்-னு சொல்றாங்க... இதெல்லாம் நியாயமா?.... ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!

பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் தற்போது சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாஜித் நதியத்வாலா தயாரித்து உள்ள நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரிட்டாம் இதற்கு இசையமைத்துள்ளார். பாய்.. பாய்-னு சொல்றாங்க... இதெல்லாம் நியாயமா?.... ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இவர்களுடன் இணைந்து சத்யராஜ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாய்.. பாய்-னு சொல்றாங்க... இதெல்லாம் நியாயமா?.... ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!இந்நிலையில் சல்மான் கான், “ரஜினி சார், சூர்யா, சிரஞ்சீவி காரு, ராம் சரண் ஆகியோரின் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். அந்த படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால் அவருடைய ரசிகர்கள் எங்களின் படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்வதில்லை. அதேபோல் அவர்களின் ஊருக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை பாய்.. பாய்.. என்று அழைப்பார்கள். ஆனால் எங்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு செல்வதில்லை” என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

MUST READ