Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் இந்த நடிகர் தான்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் இந்த நடிகர் தான்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் இந்த நடிகர் தான்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்தது எட்டாவது சீசன் அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் பல கமிட்மெண்ட்கள் இருப்பதனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் பல முக்கிய நடிகர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வந்தது.

தற்போது இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ