Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனின் அடுத்த படம் இதுதான்.... தீவிரமாக நடைபெறும் முன்னணி வேலைகள்!

அல்லு அர்ஜுனின் அடுத்த படம் இதுதான்…. தீவிரமாக நடைபெறும் முன்னணி வேலைகள்!

-

- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுனின் அடுத்த படம் இதுதான்.... தீவிரமாக நடைபெறும் முன்னணி வேலைகள்!அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார். படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் டீசரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. எனவே வருகின்ற டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ, நெல்சன் ஆகியோர்களின் இயக்கத்தில் தனது அடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.அல்லு அர்ஜுனின் அடுத்த படம் இதுதான்.... தீவிரமாக நடைபெறும் முன்னணி வேலைகள்! அதற்கு முன்னதாக அல வைகுந்தபுரமுலு படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. தற்போது கிடைத்த தகவலின் படி புஷ்பா 2 படத்திற்கு பிறகு திரிவிக்ரம் இயக்கத்தில் தான் அல்லு அர்ஜுன் நடிக்க போகிறார் என்றும் அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருக்கிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ