Homeசெய்திகள்சினிமாஇதுதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு.... ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்!

இதுதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு…. ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்!

-

- Advertisement -

நடிகர் யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு.... ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்!

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். மேலும் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் யாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அவர் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் அன்பான நலம் விரும்பி களுக்கு, புத்தாண்டு விடியலில் பிரதிபலிப்பு, தீர்மானங்கள், புதிய கோரிக்கைகளை பட்டியலிடுவதற்கான நேரம் இது. பல வருடங்களாக நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பு அளவில்லாதது. ஆனால் சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது.இதுதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு.... ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்! குறிப்பாக என் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று வரும்போது நம் அன்பு மொழியை மாற்ற வேண்டும். உங்களுடைய அன்பின் வெளிப்பாடு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் இருக்கக்கூடாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அறிவது, உங்கள் இலக்குகளை நோக்கி பயணிப்பது, மகிழ்ச்சியை பரப்புவது ஆகியவைதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. என் பிறந்தநாளில் நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன். ஊரில் இருக்க மாட்டேன். இருப்பினும் உங்களின் அன்பும் அரவணைப்பும் என்னை எப்போதும் வந்து சேரும். அது என்னை ஊக்குவிக்கும். பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ