Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்!

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்!

-

நடிகர் சசிகுமார், இந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்! அதற்கு முன்னதாக எவிடன்ஸ், பிரீடம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் சசிகுமார். ஆனாலும் சசிகுமாரின் நடிப்பில் உருவாக்கிய பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது.சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்!இருப்பினும் கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு சசிகுமாருக்கு பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகின்றன. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி குட் நைட் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே சமயம் டாடா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜப்பான் பட இயக்குனர் ராஜுமுருகன் இயக்க உள்ளார். சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்!இதில் நடிகை சைத்ரா ஆச்சர், சசிகுமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், சசிகுமாரின் இந்த புதிய படத்திற்கு மதர் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ