Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தின் தரமான டைட்டில் ..... ஆனால் அதில் இப்படி ஒரு சிக்கலா?

‘சூர்யா 44’ படத்தின் தரமான டைட்டில் ….. ஆனால் அதில் இப்படி ஒரு சிக்கலா?

-

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.'சூர்யா 44' படத்தின் தரமான டைட்டில் ..... ஆனால் அதில் இப்படி ஒரு சிக்கலா? இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்படி சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே அந்தமான், ஊட்டி, கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ், சூர்யா 44 படத்திற்கு கல்ட்-CULT என்ற தரமான தலைப்பை யோசித்துள்ளாராம். ஆனால் நடிகர் அதர்வா, தான் இயக்க இருக்கும் புதிய படத்திற்கு இந்த தலைப்பை தான் பதிவு செய்துள்ளாராம். 'சூர்யா 44' படத்தின் தரமான டைட்டில் ..... ஆனால் அதில் இப்படி ஒரு சிக்கலா?இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ், என்னுடைய கதைக்கு இந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என அதர்வாவிடம் அந்த தலைப்பை கேட்க அதர்வா அதற்கு நோ சொல்லிவிட்டாராம். எனவே இது போன்ற வேறொரு தலைப்பை தேடி வருகின்றாராம் கார்த்திக் சுப்பராஜ். எனவே ரசிகர்கள் பலரும் சூர்யா 44 படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ