நடிகர் பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தி ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். மேலும் ஸ்ப்ரிட், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு பான் இந்திய ஸ்டாராக கலக்கி வரும் பிரபாஸ் 45 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கூட பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. ஆனால் நாளடைவில் இந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. இருப்பினும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து அவருடைய அம்மா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “பிரபாஸுக்கு, ரவி என்ற நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருடைய திருமண வாழ்க்கை கசப்பானதாக அமைந்துவிட்ட நிலையில் அது பிரபாஸை மிகவும் பாதித்திருக்கிறது. இதன் காரணமாக பிரபாஸ் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இருப்பினும் என்றாவது ஒருநாள் அவருடைய மனம் மாறும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -