Homeசெய்திகள்சினிமாஇதனால் தான் நான் மியூசிக் டைரக்டராக மாறினேன்.... யுவன் சங்கர் ராஜா!

இதனால் தான் நான் மியூசிக் டைரக்டராக மாறினேன்…. யுவன் சங்கர் ராஜா!

-

இசைஞானி இளையராஜாவின் மகன் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக மாறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.இதனால் தான் நான் மியூசிக் டைரக்டராக மாறினேன்.... யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜா எப்படி தனது இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தாரோ அதேபோல், யுவன் சங்கர் ராஜாவும் தனது தனித்துவமான இசையினால் பல ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். காதல் பாடலாக இருந்தாலும் சரி, சோகப் பாடலாக இருந்தாலும் சரி, ஜாலியான பாடல்களாக இருந்தாலும் சரி, குத்து பாடலாக இருந்தாலும் சரி எந்த பாடலானாலும் அதற்கு அட்டகாசமான இசையமைத்து அனைவரையும் அசத்தி விடுவார். கடைசியாக இவர் விஜயின் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்தது கார்த்தியின் சர்தார் 2 போன்ற படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இதனால் தான் நான் மியூசிக் டைரக்டராக மாறினேன்.... யுவன் சங்கர் ராஜா!அடுத்தது இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, தான் பள்ளி பருவத்தில் படிக்கும்போது தனது அப்பாவின் இசையை அனைவரும் பாராட்டுவார்கள் என்றும் சில வருடங்கள் கழித்து திடீரென அவரது நண்பர்கள் “இனி உங்க அப்பா எல்லாம் ஒண்ணுமே கிடையாது. ரகுமான்னு ஒருத்தர் வந்துட்டாரு” என சொன்னதாகவும் இதனால் தனது அப்பாவின் பெருமையை காப்பாற்ற வேண்டுமென தான் மியூசிக் டைரக்டராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ