மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா 2 வரை..
- Advertisement -
இன்று மகளிர் தினத்தை ஒட்டி வடக்குப்பட்டி ராமசாமி, யாத்ரா 2 , தூக்குதுரை என அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் இன்று ஒட்டுமொத்தமாக ஓடிடி தளங்களில் வெளியாகின்றன

சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் 2-ம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் யாத்ரா 2. மஹி வி ராகவ் இயக்கியிருக்கிறார். இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படமும் இன்று அமேசாம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அதேபோல, யோகிபாபு மற்றும் சென்ட்ராயன் நடித்த தூக்குதுரை திரைப்படம் இன்று அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், மணிகண்டன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லவ்வர் திரைப்படமும் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.