2026 பொங்கல் தினத்தில் வெளியாகும் 3 பெரிய ஹீரோக்களின் படங்கள்.
ஜனநாயகன்
விஜயின் 69 ஆவது படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி. என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NTR 31
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தற்காலிகமாக NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் அதர்வா, ஶ்ரீலீலா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.