நான் தளபதி69 படத்தை இயக்கினால்… இயக்குநர் நெல்சனின் தேர்வு…
- Advertisement -

தமிழ் திரையுலகின் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். ஆண்டுக்கு ஒரிரு திரைப்படங்கள் வெளியானாலும், அவை அனைத்துமே ஹிட் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, மேலும் பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். மேலும், படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அண்மையில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் நெல்சனிடம், நீங்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால், யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், நாயகிகளாக நயன்தாரா மற்றும் அலியா பட்டை தேர்வு செய்திருப்பேன் என்று தெரிவித்தார்.