நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இப்படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விக்ரம் தனது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்க உள்ளார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளதாகவும் சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் மற்றும் பிரபல தெலுங்கு நடிகரும் வில்லனாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிகமாக சியான் 62 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.