Homeசெய்திகள்சினிமாரசிகர்கள் எல்லோரும் ரிங்டோனை மாற்றும் டைம் வந்திருச்சு.... ஜி.வி. பிரகாஷ் பேட்டி!

ரசிகர்கள் எல்லோரும் ரிங்டோனை மாற்றும் டைம் வந்திருச்சு…. ஜி.வி. பிரகாஷ் பேட்டி!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். ரசிகர்கள் எல்லோரும் ரிங்டோனை மாற்றும் டைம் வந்திருச்சு.... ஜி.வி. பிரகாஷ் பேட்டி!இதற்கிடையில் பல பெரிய ஹீரோக்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் விக்ரமின் வீர தீர சூரன், அருண் விஜயின் வணங்கான் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதே சமயம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கப் போவதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருகின்றன.

அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாக ஆரம்பத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களினால் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திலிருந்து விலக அவருக்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் களம் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் குட் பேட் அக்லி படத்தில் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் எல்லோரும் ரிங்டோனை மாற்றும் டைம் வந்திருச்சு.... ஜி.வி. பிரகாஷ் பேட்டி!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ், “தற்போது நான் ஒரு பெரிய ஸ்டார் நடிகரின் படத்திற்கு இசையமைத்து வருகிறேன். அதை நான் வெளிப்படையாக கூற முடியாது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகு தான் சொல்ல முடியும். அந்த ஸ்டார் நடிகரின் படங்களில் இடம்பெற்ற பின்னணி இசையிலேயே இந்தப் படத்திற்காக உருவாகும் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும். எனவே ரசிகர்கள் அனைவரும் தங்களின் ரிங்டோனை மாற்றும் டைம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ