Homeசெய்திகள்சினிமாஇன்று ஓடிடியில் வெளியான படங்கள்.... மிஸ் பண்ணிடாதீங்க!

இன்று ஓடிடியில் வெளியான படங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க!

-

- Advertisement -

இன்று (நவம்பர் 8) ஓடிடியில் வெளியான படங்கள்.

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வேட்டையன் எனும் திரைப்படம் வெளியானது. இதனை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இன்று ஓடிடியில் வெளியான படங்கள்.... மிஸ் பண்ணிடாதீங்க!போலி என்கவுண்டர் குறித்தும் கல்வியில் உள்ள ஓட்டைகள் குறித்து பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

தேவரா

தேவரா எனும் திரைப்படமானது பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இன்று ஓடிடியில் வெளியான படங்கள்.... மிஸ் பண்ணிடாதீங்க!இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்ற நிலையில் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று (நவம்பர் 8) இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர்.எம்

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் தான் ஏ.ஆர்.எம். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் டோவினோ தாமஸ் மூன்று தோற்றங்களில் நடித்திருந்தார். இன்று ஓடிடியில் வெளியான படங்கள்.... மிஸ் பண்ணிடாதீங்க!இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரித்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜித்தின் லால் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

MUST READ