Homeசெய்திகள்சினிமாஇன்று உலக நீரிழிவு தினம் .... கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.... ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!

இன்று உலக நீரிழிவு தினம் …. கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்…. ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!

-

இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர். இவர் பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தனுஷின் ராயன் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். இன்று உலக நீரிழிவு தினம் .... கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.... ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!அடுத்து வர இருக்கும் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில் ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். இந்த விருது ஏ ஆர் ரகுமானின் 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைகளை உடைய ஏ ஆர் ரகுமான் (நவம்பர் 14) உலக நீரிழிவு தினமான இன்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில், “நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றை பற்றி பேச விரும்புகிறேன். அது நீரிழிவு நோய் மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோய் என்பது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழி வகுக்கும். கடுமையான பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தி குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இதோ. வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரொட்டினோபதியை ஆரம்பித்திலேயே கண்டறியலாம். அதன் மூலம் உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம்.

இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள். நீரிழிவு நோய் உங்களுக்கு இருந்தால் அல்லது நீரிழிவு நோய் உடையவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை அனைவருக்கும் பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ