கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 26) நடைபெற இருக்கிறது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படக்குழுவினர் மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில் இன்று கங்குவா படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் சென்னை, நேரு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதை உறுதி செய்துள்ளது. விரைவில் இதன் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, கோவை சரளா, நட்டி நடராஜ், கே எஸ் ரவிக்குமார் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.