மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் கடைசியாக நேரு, மலைக்கோட்டை வாலிபன் போன்ற படங்கள் வெளியாகின. அடுத்ததாக இவர் வ்ருஷபா, பரோஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் 2 – எம்புரான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் மோகன்லாலுடன் இணைந்து மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் துபாய், அமெரிக்கா, கேரளா போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
Team #L2E wishes our Empuraan @Mohanlal a Happy Birthday! 🎉 May you have a blockbuster year ahead. 💥 Gear up for the epic saga with power-packed moments. 🔥🤩 @mohanlal @PrithviOfficial #MuraliGopy @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @antonypbvr @aashirvadcine… pic.twitter.com/QzNPBQYsvj
— Lyca Productions (@LycaProductions) May 21, 2024
இந்நிலையில் மோகன்லால் தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக எம்புரான் பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் மோகன்லால் செம மாஸான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.