இன்று நடைபெறும் நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் தற்போது தண்டேல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை காதலிக்க தொடங்கினார். இருவரும் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வந்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் ஹல்தி கொண்டாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இரு வீட்டாரின் குடும்பத்தினர்களும் நண்பர்களும் சூழ இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் நடிகர் ராணா டகுபதி, ராஜமௌலி, சுகுமார், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், மகேஷ் பாபு, நயன்தாரா , ஷாருக்கான், அமிதாப் பச்சன், அமீர் கான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.