Homeசெய்திகள்சினிமாஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!

ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!

-

- Advertisement -

ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் நிவாரணப் பணிகள் தொடர்பான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அதன்படி வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு (நவம்பர் 30) கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் நகைக்கடைகள் போன்றவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகளும் இயங்காது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகையினால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என எங்களது APC News Tamil நிறுவனத்தின் சார்பிலும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

MUST READ