Homeசெய்திகள்சினிமாநாளை ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்

நாளை ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்

-

நாளை ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்

சந்தானத்தின் ‘கிக்’, யோகி பாபுவின் ‘லக்கிமேன்’, பாரதிராஜாவின் ‘கருமேகங்கள் கலைகின்றன’, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’, பரம்பொருள், ரங்கோலி ஆகிய ஆறு படங்கள் நாளை வெளியாகிறது.

பொம்மை நாயகி, யானை முகத்தான் படங்களுக்கு பிறகு யோகிபாபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லக்கிமேன்’. பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யோகிபாபுவிற்கு ஜோடியாக ரேச்சல் ரெபேக்கா நடிக்க, வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றி பேசும் லக்கிமேன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

Lucky Man (2023) - IMDb

நடிகர் சந்தானத்தின் 15-வது திரைப்படமாக ‘கிக்’ உருவாகி உள்ளது. லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இதனை இயக்கி உள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கிக்’ படமும் நாளை வெளியாகிறது.

கருமேகங்கள் கலைகின்றன' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதே தேதியில் ரிலீஸாகும் சந்தானம் படம்..! - News - IndiaGlitz.com

தங்கர்பச்சான் இயக்கத்தில், இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படமும் நாளை வெளியாக இருக்கிறது.

அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா ஆகியோர் நடிப்பில் சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘பரம்பொருள்’ படத்துக்கு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இத்திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது.

Video: சரத்குமார் - அமிதாஷின் 'பரம்பொருள்' பட டிரெய்லர் இதோ

வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வாலி மோகன் தாஸ் புதுமுகங்கள் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா ஆகியோரை வைத்து ‘ரங்கோலி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படம் பள்ளி பருவ வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரியின் மகனான ஹமரேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

Rangoli - Official Trailer | Hamaresh | Prarthana | Vaali Mohan Das | Sundaramurthy KS - YouTube

விஜய் தேவர கொண்டா, சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஷிவ நிர்வாணா இயக்கி உள்ள இப்படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் நாளை திரைக்கு வருகிறது.

MUST READ