Homeசெய்திகள்சினிமாடோவினோ தாமஸ், திரிஷா கூட்டணியின் 'ஐடென்டிட்டி' ..... டீசர் வெளியீடு!

டோவினோ தாமஸ், திரிஷா கூட்டணியின் ‘ஐடென்டிட்டி’ ….. டீசர் வெளியீடு!

-

ஐடென்டிட்டி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். டோவினோ தாமஸ், திரிஷா கூட்டணியின் 'ஐடென்டிட்டி' ..... டீசர் வெளியீடு!அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகை திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து வினய் ராய், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை அகில் பால், அனஸ்கான் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படத்தை செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் ராகம் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைக்க அகில் ஜார்ஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படமானது 2025 ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் ஆக்ஷன் திரில்லர் கதைகளத்தில் உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ