டோவினோ தாமஸ், திரிஷாவின் ஐடென்டிட்டி பட ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் டோவினோ தாமஸ், 2018 என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அகில் பால் – அனஸ் கான் இயக்கி இருந்தனர். இந்த படத்தில் திரிஷா, வினய் ராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் ராகம் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைத்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.