Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டில் வெளியாகும் டோவினோ தாமஸின் 'ஐடென்டிட்டி'.... ரிலீஸ் தேதி இதுதான்!

அடுத்த ஆண்டில் வெளியாகும் டோவினோ தாமஸின் ‘ஐடென்டிட்டி’…. ரிலீஸ் தேதி இதுதான்!

-

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ஐடென்டிட்டி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டில் வெளியாகும் டோவினோ தாமஸின் 'ஐடென்டிட்டி'.... ரிலீஸ் தேதி இதுதான்!

கடந்த 2020 ஆம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் பாரன்சிக் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அகில் பால், அனஸ் கான் இயக்கியிருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் உடன் இணைந்து திரிஷா, வினய் ராய், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் ராகம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைத்திருக்கிறார். அகில் ஜார்ஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. அடுத்த ஆண்டில் வெளியாகும் டோவினோ தாமஸின் 'ஐடென்டிட்டி'.... ரிலீஸ் தேதி இதுதான்!அதே சமயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படம் 2025 ஜனவரி மாதம் 2ஆம் தேதி திரைக்கு வரும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ