Homeசெய்திகள்சினிமாடொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம்... ரிலீஸ் தேதி இதோ...

டொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம்… ரிலீஸ் தேதி இதோ…

-

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், வலம் வருபவர் டொவினோ தாமஸ். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018- என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. கேரள வெள்ளத்தின்போது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டொவினோ தாமஸின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. 2018 படத்தில் டொவினோவின் இயல்பான நடிப்பு ரசிகர்களிடமிருந்து வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது ஐடன்டிடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். மேலும், டொவினோ, டிரைவிங் லைசென்ஸ் என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் லால் ஜெ ஆர் நடிகர் திலகம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகர் டொவினோ, டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மைத்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம், மலையாளத்தில் எடுக்கும் முதல் திரைப்படமாகும்.
இந்நிலையில், டொவினோ நடிக்கும் நடிகர் திலகம் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ