Homeசெய்திகள்சினிமாமோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்... படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ...

மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…

-

மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் லூசிபர் இரண்டாம் பாகம், எம்புரான் படப்பிடிப்பில் நடிகர் டொவினோ தாமஸ் கலந்து கொண்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் இதனை இயக்கியிருந்தார். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் நாளுடன் இணைந்து விவேக் ஓபராய் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரித்விராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் லைக்கா நிறுவனம் ‘எம்புரான்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள லூசிபர் 2 படத்தை படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் டொவினோ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன. முதல் பாகத்திலும் டொவினோ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ